உள்நாட்டு செய்திகள்

கொரோனா தொற்றினால் கிழக்கில் மூன்றாவது மரணம்..

கொரோனா தொற்றின் காரணமாக கிழக்கு மாகாணத்தில் மற்றுமொரு உயிரிழப்பு இன்று (21) திங்கட்கிழமை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கின்றது.

சாய்ந்தமருது, வெலிவேரியன் பிரதேசத்தினைச் சேர்ந்த 58 வயது நபரே இன்று உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவருக்கு மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் (Rapid Antigen) பரிசோதனையின் மூலம் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த மூன்று பேர் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த நபருடன் தொடர்புபட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top