உலகம்

கொரோனா நோயாளியுடன் தகாத உறவு – தாதியர் இடைநிறுத்தம் – இந்தோனேஷியாவில் சம்பவம்

இந்தோனேஷியாவில் கொரோனா நோயாளியுடன் தவறான உறவில் ஈடுபட்ட தாதியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு கடுமையான சட்டப்பிரிவுகளின், கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜகார்த்தாவில் உள்ள வைத்தியசாலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நோயாளியை கட்டாயப்படுத்தி தவறான உறவில் ஈடுபட்டார் என, அந்த நோயாளி சமூக வலைத்தளத்தில் இந்த விவகாரத்தை வெளியிட்டார். இது சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து வைத்தியசாலை நிர்வாகம் நடத்திய விசாரணையில் கொரோனா நோயாளியிடம் தவறான பாலியல் உறவில் ஈடுபட்டமை உறுதியானது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்தது. இருப்பினும் வைத்தியசாலை நிர்வாகம் குறித்த தாதியரை பணியல் இருந்து இடைநிறுத்தம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top