உலகம்

கொரோனா வைரஸ் தடுப்பூசி: பாதுகாப்பு பிரச்னைகள் பற்றி நீங்கள் அறிய வேண்டிய விடயங்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பு, உயிரிழப்பு குறித்த தகவல்கள் கடந்த பத்து மாதங்களுக்கும் மேலாக செய்திகளை ஆக்கிரமித்திருந்த சூழ்நிலையில், தற்போது அந்த இடத்தை கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து குறித்த செய்திகள் பிடித்து வருகின்றன.

அதேபோன்று, கொரோனா வைரஸின் தாக்கம் குறித்து நிலவி வந்த அச்சம், தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து குறித்த அச்சமாக மாறியுள்ளது.

மருத்துவத் துறையை பொருத்தவரை, “பாதுகாப்பானது” மற்றும் “தீங்கற்றது”, “ஆபத்து” மற்றும் “ஆபத்தை விளைவிக்கக் கூடியது” ஆகியவற்றுக்கிடையேயான வேறுபாட்டை புரிந்துகொள்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த நிலையில், ஃபைசர் தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட இரண்டு பேருக்கு ஒவ்வாமை எதிர்வினைகள் இருந்தன. எனவே, கோவிட்-19 தடுப்பு மருந்துகள் பயன்படுத்த “பாதுகாப்பானவை” என்று பேசும்போது, அதற்கு உண்மையிலேயே என்னதான் அர்த்தம்?

“நீங்கள் முற்றிலும் பாதகமான விளைவைக் கொண்டிருக்காத ஒன்றை அதற்கு அர்த்தமாக கருதினீர்கள் என்றால், அது தவறு. எந்தவொரு தடுப்பு மருந்தும் ‘பாதுகாப்பானது’ அல்ல, எந்த மருந்தும் ‘பாதுகாப்பானது’ அல்ல. ஒவ்வொரு பயனுள்ள மருந்தும் தேவையற்ற விளைவுகளைக் கொண்டுள்ளது” என்கிறார் லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசினை சேர்ந்த பேராசிரியர் ஸ்டீபன் எவன்ஸ்.

“நன்மையுடன் ஒப்பிடும்போது தேவையற்ற விளைவுகளின் சமநிலை நன்மையின் பக்கம் அதிகமாக உள்ளதையே நான் ‘பாதுகாப்பானது’ என்று கருதுகிறேன்.”

உலகிலேயே முதல் முறையாக ஃபைசர் தடுப்பு மருந்துக்கு அனுமதி வழங்கிய பிரிட்டன் அரசு தங்களது மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் தரநிலையை இந்த தடுப்பு மருந்து உறுதிசெய்துள்ளதாக தெரிவித்தது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top