கொழும்பு, (காலிமுகத்திடல்) கோல்பேஸ் பகுதியில் நேற்று (29) எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 09 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இதனை, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹண இன்று(09) தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை இனங்காண்பதற்காக இவ்வாறு எழுமாற்றான துரித அன்டிஜன் பரிசோதனை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
