உள்நாட்டு செய்திகள்

சந்திரகாந்தன் அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளலாமா??

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் சிறைச்சாலை ஆணையாளரின் அனுமதியை பெற்று  மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்துகொள்ள முடியும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இன்றைய தினம் மாவட்ட அபிவிருத்திக் குழுவில் கலந்துகொள்வதற்கான அனுமதி கோரிய மனு மேல் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீதிமன்றில் சட்டத்தரணிகள் ஆஜராகாத நிலையில் இன்றைய தினம் அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்துகொள்வது தொடர்பான கட்டளை மட்டும் விடுக்கப்பட்டது.

அத்துடன் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்து கொள்வது தொடர்பான விடயம் சிறைச்சாலை ஆணையாளருடன் தொடர்புபட்டது எனவும் அவரிடம் இது தொடர்பான கோரிக்கையினை சிறைச்சாலை ஆணையாளருக்கு முன்வைக்குமாறும் அங்கு அனுமதி மறுக்கப்படும் பட்சத்திலேயே நீதிமன்றத்தினை நாடமுடியும் எனவும் மேல் நீதிமன்ற நீதிபதி டி.சூசைதாசன் தனது கட்டளையில் தெரிவித்துள்ளார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top