ஆன்மீகம்

சபரிமலை கோவிலுக்கு பக்தர்களை அனுமதிப்பது தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

வருடா வருடம் கோடிக்கணக்கான பக்தர்கள் திரண்டு சபரிமலை ஐயனை தரிசிக்க செல்வது வழக்கம். அந்த வகையில், இவ்வருடம் கொரோனா பரவலில் இந்தியா பாரிய சவால்களை சந்தித்து வருகிறது.

இருப்பினும், சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் முதல் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் மாதத்தில் இருந்து விதிமுறைகளுடன் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தான சங்கம் தெரிவித்துள்ளது.

ஓணம் பண்டிகை மற்றும் உத்தராடம், திருவோண சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

அத்தோடு, செப்டெம்பர் 2ஆம் திகதி வரை பக்தர்கள் தரிசனமின்றி வழக்கமான பூஜைகள் நடைபெறும் என அறிவித்துள்ளது. இந்நிலையில் நவம்பர் 16 இல் ஆரம்பமாகும் மண்டல பூஜைக்காலம் முதல் சபரிமலையில் விதிமுறைகளுடன் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்திருப்பதாகவும் திருவிதாங்கூர் தேவஸ்தான சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக சபரிமலை கோயிலுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்காமல் இருந்தது. தற்போது நவம்பர் 16 ஆம் திகதிக்கு மேல் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top