பொழுது போக்கு

சமூக வலையத்தளங்கலிருந்து திரிஷா விலகினார்

டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலிருந்து நடிகை திரிஷா விலகியுள்ளார். நடிகர், நடிகைகள் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். தங்களது அன்றாட நடவடிக்கைகளை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவது, அவ்வப்போது எடுக்கும் புகைப்படங்களை அதில் வெளியிடுவது என தங்களது வலைத்தள பக்கத்தை பரபரப்பாக வைத்திருப்பார்கள். திரிஷாவும் டிவிட்டர், இன்ஸ்டாகிராமில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் திடீரென அவர் சமூக வலைத்தளங்களிலிருந்து விலகியுள்ளார். இது பற்றி திரிஷா கூறும்போது, ‘இந்த நேரத்தில் எனது மனதுக்கு ஒரு மறதி தேவை. டிஜிட்டல் ஒரு போதைப்பொருள். இப்போதைக்கு இது வேண்டாம். வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள். இதுவும் கடந்துபோகும். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்’ என்றார். இதற்கு முன்பு ஒருமுறை டிவிட்டரிலிருந்து அவர் விலகியுள்ளார். சில மாதங்களுக்கு பிறகு திரும்பவும் வந்தார். அதுபோல் திரிஷா இடைவெளிவிட்டு திரும்ப வருவார் என ரசிகர்கள் கூறுகின்றனர்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top