உலகம்

சவுதியில் சர்வதேச விமான சேவை ரத்து

சவுதியில் சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சவுதி அரசுத் தரப்பில், “கரோனா வைரஸ் பரவல் குறித்து அடுத்தகட்ட அறிவிப்பு வரும்வரை வகையில் சவுதியில் சர்வதேச விமான சேவை நிறுத்தப்படுகிறது. மேலும், சர்வதேச விமானங்களில் சவுதியைச் சேர்ந்தவர்களை அழைத்து வரும் விமானங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விமானங்களைத் தடை செய்துள்ள நிலையில் உள்நாட்டு விமான சேவையை சில இடங்களில் சவுதி அரசு அனுமதித்துள்ளது. சவுதியில் இதுவரை 1,27,541 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். சவுதியில் அதிகபட்சமாக ரியாத்தில் அதிகம் பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சவுதியில் இம்மாதம் முதல் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சவுதியில் வணிக நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் ஆகியவை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

சவுதியில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்துப்பட்டுள்ளன. அதேசமயம் மக்களுக்குத் தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன. கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிதல், சமூக விலகலைக் கடைப்பிடித்தல், தேவையின்றி வெளியே வராமல் இருத்தல் போன்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதை மீறுவோருக்கு முதலில் 1000 ரியால் அபராதமும், அடுத்த முறையும் அதே தவறைச் செய்தால் இருமடங்கு அபராதமும் விதிக்கப்படும். 2-வது முறை இத்தவறை வெளிநாட்டினர் செய்தால் அபராதம் செலுத்துவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top