உலகம்

சாதனை படைத்த 5 வயது சிறுமி

டுபாயில் வசிக்கும் சிறுமி பிரானவி குப்தா (வயது 5). இவர் இங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார். இந்த சிறுமி 4 நிமிடம் 23 வினாடிகளில் ஐ.நா. சபை அங்கீகரித்துள்ள 195 நாடுகளின் பெயர்களையும், அதன் தலைநகரங்களையும் மூச்சி விடாமல் ஒப்புவித்து சாதனை புரிந்துள்ளார். இவரது சாதனை தற்போது இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய சாதனை புத்தகங்களில் இடம் பெற்றுள்ளது. தொடர்ந்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் தனது பெயர் இடம் பெற வேண்டும் என அந்த சிறுமி விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கான பயிற்சிகளை எடுத்து வருவதாக அந்த சிறுமியின் பெற்றோர் தெரிவித்தனர்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top