உலகம்

சாய் பல்லவியின் LOVE STORY முடிவுக்கு வந்தது

மலையாளத்தில் அறிமுகமான ‘பிரேமம்’ என்ற முதல் படத்திலேயே மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட சாய்பல்லவிக்கு தமிழ், தெலுங்கில் படங்கள் குவிந்தன. விஜய் இயக்கிய தியா, தனுஷ் ஜோடியாக மாரி-2, சூர்யா ஜோடியாக என்.ஜி.கே படங்களில் நடித்தார். தற்போது தெலுங்கில் பிசியாக நடித்து வரும் சாய் பல்லவி, விராட பருவம், லவ் ஸ்டோரி ஆகிய படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், சேகர் கம்முலா இயக்கத்தில் நாக சைத்தன்யாவுக்கு ஜோடியாக அவர் நடித்து வந்த ‘லவ் ஸ்டோரி’ படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே சேகர் கம்முலா இயக்கத்தில் சாய் பல்லவி நடித்த ‘ஃபிடா’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top