ஆன்மீகம்

சிறப்பாக நடைபெற்ற மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம்

இலங்கையின் சின்னக்கதிர்காமம் என போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தீர்த்தோற்சவம் பண்டைய கால முறையின் படி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கதிர்காமத்தின் வரலாற்றுடன் மட்டுமன்றி இங்கு இடம்பெறும் பூஜை முறைகளும் பண்டைய முறைமையை ஒத்ததாகவே காணப்படுகின்றன.

அதற்கிணங்க கடந்த 14ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த மகோற்சவமும் பண்டைய தமிழர்களின் நடைமுறைக்கு அமைவாகவே நடைபெற்றது. 21 தினங்கள் நடைபெற்ற ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் தினமும் நடைபெற்ற உற்சவமானது சிறப்புமிக்கதாகவே காணப்பட்டது. இன்று காலை முருகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்று தங்க வேல் தாங்கிய பேழை மட்டக்களப்பு வாவிக்கரைக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அங்கு நடைபெற்ற விசேட பூஜையினை தொடர்ந்து தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது. தீர்த்தோற்சவத்தினை தொடர்ந்து முருகப்பெருமான் ஆலயத்திற்கு வரும் போது தெய்வானையம்மன் ஆலய வாசலில் சிறுமிகள் ஆர்த்தி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றதுடன், இதன்போது ஆரத்தியெடுக்கும் சிறுமிகள் மயங்கிவிழும் அதிசயமான,பக்தி பூர்வமான நிகழ்வும் நடைபெற்றது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top