உள்நாட்டு செய்திகள்

சீனிக்கான வரித்தொகை மாற்றம் – ஆயிரம் கோடி மோசடி! வெளியான அதிர்ச்சி தகவல்

சீனிக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த வரித்தொகை மாற்றம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஊடாக ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னள் நாடாளுமன்ற உறுப்பினரும் , கட்சியின் செயற்குழு உறுப்பினருமான வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் துரிதமான விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்குமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சீனிக்காக நிர்ணயிக்கப்பட்ட வரி தொகையை மாற்றம் செய்வது தொடர்பில் நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களின் காரணமாக அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய பெருந்தொகையான வரிப் பணம் கிடைக்கப்பெறாமல் போயுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தல்களைக் தமக்கு சாதகமான பயன்படுத்திக் கொண்டு அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ள இறக்குமதியாளர்கள் இலாபமீட்டிக் கொண்டுள்ளமை தொடர்பில், முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குறிப்பிட்டு முறைப்பாடு அளிக்கவே நாம் இங்கு வந்துள்ளோம். அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் சிலர், அரச நிறுவனவங்களின் உயர் அதிகாரிகளுடன் இணைந்து 1000 கோடி ரூபாவுக்கும் அதிகமான அரச பணத்தை மோசடி செய்துள்ளனர்.

இந்த திட்டமிட்ட பண மோசடிக்கு இடமளிக்கும் வகையில் நிதி அமைச்சு மற்றும் நுகர்வோர் அதிகாரச் சபை என்பன இணைந்தே தீர்மானங்களை எடுத்துள்ளன. திருடர்களை பிடிப்பதற்காக ஆட்சிக்கு வந்த அரசாங்கம் , மக்களுக்கு சொந்தமான 1000 கோடி ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவிலும் நாம் இது தொடர்பில் முறைப்பாடு அளிக்கவுள்ளோம். ஆரம்பத்தில் , மத்தியவங்கி பிணைமுறிகள் ஊடாக மோசடிகளைச் செய்தனர். தற்போது வரி அறவீடுகள் ஊடாக மோசடி செய்து வருகின்றனர். தமது வர்த்தக நண்பர்களை போசித்துவரும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்றிணையுமாறு நாம் நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top