உள்நாட்டு செய்திகள்

சூறாவளி (BUREVI) இலங்கையை தாக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது

சூறாவளி (BUREVI) இலங்கையை தாக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இன்று (30.11.2020) பிற்பகல் 01.00 மணிக்கு இலங்கை வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பு:

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் காணப்படும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது (Low Pressure Area) தற்போது தாழமுமாக (Depression) வலுவடைந்து, திருகோணமலையில் இருந்து தென்கிழக்காக 750 கிலோ மீற்றர் தூரத்தில் காணப்படுகிறது.

இது அடுத்து வரும் 12 மணித்தியாலத்தில் வலுவான தாழமுமாக (Deep Depression) உருமாறி, அதனை அடுத்து வரும் 12 மணித்தியாலத்தில் சூறாவளியாக (Cyclonic Storm) மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது பின்னர் எதிர்வரும் புதன்கிழமை 02ம் திகதி மட்டக்களப்பிற்கும் முல்லைத்தீவுக்கும் இடையில் ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தினால் இன்று (30.11.2020) காலை 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பு:

இலங்கையின் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட தாழமுக்கம் (Depression) ஆனது கடந்த 6 மணித்தியாலத்தில் மணிக்கு 12 கிலோ மீற்றர் வேகத்தில் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து தற்போது (30.11.2020 – 11.30am) திருகோணமலையிலிருந்து கிழக்கு- தென்கிழக்கு 680 கிலோமீற்றர் தூரத்திலும் கன்னியாகுமாரியில் இருந்து கிழக்காக 1090 கிலோமீற்றர் தூரத்திலும் காணப்படுகின்றது. இது அடுத்து வரும் 12 மணித்தியாலத்தில் மேலும் வலுவடைந்து வலுவான தாழமுக்கமாக (Deep Depression) ஆக வலுவடைந்து, அதனை அடுத்து வரும் 24 மணித்தியாலத்தில் சூறாவளியாக (Cyclonic Storm) உருமாறும்.
பின்னர் இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, இலங்கையின் கரையோரத்தை முல்லைத்தீவு (கொக்கிளாய் 9.0N) இற்கும், மட்டக்களப்பு (களுவாஞ்சிக்குடி 7.5N) இற்கும் இடையில் எதிர்வரும் 2ஆம் திகதி மாலை அல்லது இரவு வேளையில் ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top