அரசியல்

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் 31வது வீரமக்கள் நினைவு அனுஸ்டிப்பு

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் 31வது வீரமக்கள் நினைவுநாள் இன்று 15.07.2020 மட்டக்களப்பு மாவட்ட ( புதிய கல்முனைவீதி நாவற்குடா ) காரியாலயத்தில் தமிழ்த் தேசிய ௬ட்டமைப்பின் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர் மு.ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் கட்சியின் பல உறுப்பினர்களும் உயிர் நீத்த உறவுகளின் குடும்பங்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டு நினைவு தினத்தை சிறப்பித்தனர். இவ் நிகழ்வில் உரையாற்றிய தமிழ்த் தேசிய ௬ட்டமைப்பு வேட்பாளர் ஞானப்பிரகாசம் அவர்கள் தெரிவிக்கையில் கடந்து வந்த காலங்களின் வலிகளையும் இழந்த இழப்புக்களையும் இவ்வாறன நினைவேந்தல் போன்ற தினங்கள் ஆண்டு தோறும் நடப்பதனால் அடுத்த இளம் சமுதாயத்துக்கும் எம் மக்கள் உரிமையை பெறுவதற்காக சுமந்த வலிகளையும் போராட்டங்களையும் வெளிப்படுத்தி காட்ட முடியும். எமது தமிழ் சமூகத்திற்கான உரிமைகள் மறுக்கப்பட்டதனாலே பல இன விடுதலை போராட்டங்கள் எமது நாட்டிலே இடம்பெற்றது. இன்னமும் எமக்கான விடுதலை கிடைக்கும் வரை அதனை முன்னின்று நடத்துவது காலத்தின் கட்டாயம் .மக்கள் சக்தியே எமக்கான பலம் அதனை சிறந்த முறையில் பயன்படுத்தி மக்களின் தேவைகளையும் அபிவிருத்தியையும் முன்னெடுத்து நிறைவேற்றுவதே வேட்பாளர்களின் நோக்கமாக இருக்க வேண்டும் . இன்று ஓரணியாக தமிழ்த் தேசிய ௬ட்டமைப்புடன் எம் மக்கள் இணைந்து எமக்கான ஓர் அடையாளத்தை பாதுகாக்க வேண்டிய கடமைப்பாட்டுடன் நாம் அனைவரும் உள்ளோம். எமது சமூகத்தின் ஒற்றுமையை இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் நிலைநாட்ட வேண்டும் என்றும் இவ்வாறு எமது சமூகத்தின் இன விடுதலைக்காக உயிர்நீத்த உறவுகளின் குடும்பத்தினருக்கும் இவ் வேளையில் நாம் அனுதாபங்களையும் தெரிவிப்பது மட்டும் அல்லாது அந்த குடும்பங்களுக்கும் என்றும் நாம் நன்றி உணர்வுடன் செயற்படவேண்டும் என்றும் தெரிவித்தார் .

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top