உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி, பிரதமருக்கு அனுப்பும் கடிதத்தில் தமிழ் கட்சிகள் கையொப்பம்

திலீபனின் நினைவேந்தல் உட்பட விடுதலைப் போரில் உயிர்நீர்த்தவர்களை நினைவு கூறுவதற்கான தடைகளை விலக்கக்கோரி ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அனுப்பவுள்ள கடிதத்தில் தமிழ் தேசியத்தின் பால் நிற்கின்ற அனைத்து தமிழ் கட்சிகளும் கையொப்பமிட்டுள்ளனர். 

திலீபன் உட்பட விடுதலைப் போரில் உயிர்நீத்தவர்களை நினைவு கூறுவதற்கான தடையை இலங்கை அரசாங்கம் விலக்க வேண்டும் என நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று (18) இடம்பெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டதில் தீர்மானிக்கப்பட்டது. 

அத் தீர்மானத்தினத்தினை ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் கடிதம் முலம் அனுப்புவதற்காக இன்று (19) மீளவும் தமிழ் கட்சிகள் வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே சிவஞானம் அலுவலகத்தில் ஒன்று கூடினர். 

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அனுப்பவுள்ள கடிதத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டணிக் கட்சிகளும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் கூட்டணிக் கட்சிகளும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியும், தமிழ் தேசிய பசுமை இயக்த்தினரும் கையொப்பமிட்டனர்

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top