விளையாட்டு

ஜப்பானின் சுமோ மல்யுத்த நட்சத்திர வீரரருக்கு கொரோனா – ரசிகர்கள் அதிர்ச்சி

ஜப்பான் நாட்டின் அடையாளமாக விளங்கும் சுமோ மல்யுத்தத்தின் நட்சத்திர வீரரான ஹக்குஹோ(Hakuho) விற்கு கொரோனா தொற்று உறுதியாகிய செய்தி வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மங்கோலியா நாட்டில் பிறந்த ஹக்குஹோ, சுமோ மல்யுத்த விளையாட்டின் முன்னணி வீரராக வலம் வருபவர். இவர் கடந்த சில நாட்களாக வாசனை உணர்வை இழந்த நிலையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஹக்குஹோவிற்கு கொரோனா தொற்று உறுதியானது.

புத்தாண்டை ஒட்டி ஜனவரி 10ம் திகதி கிராண்ட் சுமோ மல்யுத்த போட்டி நடைபெற இருந்த நிலையில் அதில் பங்கேற்கும் ஹக்குஹோவிற்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் போட்டி ஒத்தி வைக்கப்படலாம் என கூறப்படுகிறது. கடந்த மே மாதம் 28வயதான Shobushi என்ற சுமோ மல்யுத்த வீரர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடலுறுப்புகள் செயலிழந்து உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top