கடந்த சில நாட்களாக பெரிதும் பேசப்பட்ட ஜப்பானிய யுவதி, இலங்கை இளைஞர் பற்றிய விவகாரம் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளது. இந்த யுவதியை இலங்கைக் காதலருக்கு மணம் முடித்துக் கொடுக்க யுவதியின் தாய் இணக்கம் தெரிவித்துள்ளதாக யுவதியின் சார்பாக ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதன் பிரகாரம், விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞனை தலா ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஜப்பானிய சட்டதிட்டங்களின் பிரகாரம், 16 வயதைத் தாண்டிய யுவதியொருவர் திருமணம் முடிக்கலாம். அதனையும், அந்த யுவதி தற்போதுள்ள நிலையையும் கருத்திற்கொண்டு அவரை இலங்கை இளைஞருக்கு மணம் முடித்துக் கொடுப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
