உள்நாட்டு செய்திகள்

தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்து காணமல் போன ஒருவர் மகாவலி கங்கையில் சடலமாக மீட்பு

கம்பளையில் கடந்த வெள்ளிக்கிழமை (08) காணாமல்போன ஆண் ஒருவர் நேற்று காலை மகாவலி கங்கையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கம்பளை, கங்கவட்ட பகுதியில் குடும்பம் ஒன்று சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்ததை அடுத்து குறித்த வீட்டில் இருந்து நபர் ஒருவர் (வயது – 60) கடந்த வெள்ளிக்கிழமை வெளியில் சென்றுள்ளார்.

இவ்வாறு சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் பதற்றமடைந்த உறவினர்கள் அது தொடர்பில் கம்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். பொலிஸ் விசாரணைகளும் ஆரம்பமாகி இருந்தன. இந்நிலையில் கம்பளை ரயில்வே கடவைக்கு அருகில் மகாவலி கங்கையில் சடலம் ஒன்று இருப்பதாக பொலிஸாருக்கு நேற்று தகவல் வழங்கப்பட்டுள்ளது. அது காணாமல்போன நபருடைய சடலம் என்பதனை உறவினர்கள் ஊடாக பொலிஸார் உறுதிப்படுத்தினர். சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (Adaderana Tamil)

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top