அரசியல்

தபால் சேவையை மேம்படுத்தவா மட்டக்களப்பு மக்கள் அபிவிருத்திக்காக வாக்களித்தார்கள்? பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு லட்சத்துக்கு அதிகமான மக்கள் அபிவிருத்திக்காக வாக்கு கேட்டவர்களுக்காக வாக்களித்துள்ளனர் அந்த மக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் சேவையை மேம்படுத்தவா வாக்களித்தார்கள்? இல்லை. மாறாக, கல்வி சுகாதார பொருளாதார துறையினை மேம்படுத்துவதனை எதிர்பார்தே அபிவிருத்திக்காக அந்த மக்கள் வாக்களித்தனர் என மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் அதிகூடிய வாக்குகளை பெற்று தெரிவாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்கள் எருவில் பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

நான் அரசியல் பயணத்தினை ஆரம்பிக்கும் போது ஏனைய வேட்பாளர்களையோ பாராளுமன்ற உறுப்பினர்களையோ விமர்ச்சிக்க கூடாது என்ற முடிவுடனே தொடர்ந்தும் பயணிக்கின்றேன். இருந்து, யாரையும் குறைகூறுவது நோக்கமல்ல. நாங்கள் வாக்கு கேட்கும் போது இந்த பிரதேசத்தை சிங்கபூராக மாற்றுவோம் என்று பொய்யான வாக்குறுதிகளை கூறி வாக்கு கேட்கவில்லை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிமையினை முதன்மைப்படுத்தி மக்களுக்கான அபிவிருத்தியை நோக்காக கொண்டே செயற்படுகின்றது என்றே வாக்கு கேட்டோம் தொடர்ந்தும் அவ்வாறே பயணிப்போம். ஆனால், அபிவிருத்தி என்ற நோக்கத்துக்காக வாக்களித்த மக்கள் தபால் சேவையை மேம்படுத்துவற்காக வாக்களிக்கவில்லை. மட்டக்களப்பிலே தபால் சேவையினை விருத்தி செய்ய வேண்டுமானால் மாங்காட்டுக்கு உப தபாலகமும் சில தபாலங்களுக்கு கட்டங்களும் களுவாஞ்சிகுடியில் உள்ள தபால் நிலையத்தினை விடுவிப்பு செய்து புனரமைப்பு செய்ய வேண்டிய சில தேவைகள் மாத்திரமே காணப்படுகின்றது அதனை விட அபிவிருத்தியினை எதிர்பார்த்த இந்த மக்களுக்கு தபால் சேவையினை விட முக்கிய பல தேவைகள் உள்ளது. ஏன் கல்வி சுகாதார பொருளாதார மேம்பாட்டுக்கான அமைச்சினை பெறவில்லை என தங்கள் பிரதிநிதிதிகளிடம் சென்று அபிவிருத்திக்காக வாக்களித்த மக்கள் கேளுங்கள் நீங்கள் எதிர்பார்க்கும் உங்களுடைய தேவைகளை அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள் அவர்களால் முடியாவிட்டால் எம்மால் முடிந்தவற்றை செய்வதற்கு நாம் தயாராக இருக்கிறோம் என தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் நாங்கள் எந்தவொருவருக்கும் பணம் கொடுத்து வாக்கு கேட்கவில்லை நாம் கடந்த காலங்களில் மக்களுக்கு ஆற்றிய சேவையினை மக்கள் நன்கு அறிவார்கள் எதிர்காலத்தில் எவ்வாறு சேவையாற்றுவோம் என்பதனை அறிந்தே 33332 வாக்குகளை எனக்கு அளித்துள்ளார்கள். ஆனால், தேர்தலுக்கு ஒரு சில வாரங்களுக்கு முன்னர் சில கட்சிகளாலும் வேட்பாளர்களாலும் செய்த செயற்பாடுகளை நான் செய்திருந்தால் இன்னும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்க முடியும். ஆனால், நான் தெளிவான தீர்மானம் ஒன்றினை எடுத்திருந்தேன் எந்தவிதமான சலுகைகளையோ பொருட்களையோ சாராயமோ கொடுக்காமல் எத்தனை விருப்பு வாக்குகள் கிடைக்கிறதோ அதுவே எனக்காக வரட்டும் அதுவே என்னுடைய உண்மையான வெற்றி இச் செயற்பாட்டினை நான் செய்யாமல் தோற்கடிக்கப்பட்டாலும் பரவாயில்லை இந்த அரசியல் கலாசாரத்தினை மட்டக்களப்பிலே உருவாக்க கூடாது என்பதிலே தெளிவாக இருந்தேன். என்னுடைய சேவையினை இந்த மாவட்ட மக்கள் நன்கு உணர்த்து வாக்களிப்பார்கள் என்ற முழுமையான நநம்பிக்கையோடு போட்டியிட்டு முதலாவது பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுள்ளமைக்காக மிக்க நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என எருவில் பிரதேச மக்களிடம் குறிப்பிட்டார்.

இந் நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் திரு.காண்டீபன் மற்றும் எருவில் ஆலயங்களின் தலைவர்கள் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் தேர்தலில் வெற்றியீட்டுவதற்காக வாக்களித்த மக்களுக்காக நன்றியினை தெரிவிக்கும் இவ் மக்கள் சந்திப்பு அமோக வரவேற்புடன் நடைபெற்றது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top