உள்நாட்டு செய்திகள்

தப்பிச்சென்ற கொரோனா கைதிகள் இதுவரை பிடிபடவே இல்லை

கொரோனா தொற்றுடன் தப்பிச் சென்ற நான்கு கைதிகளும் இதுவரை கைது செய்யப்படவில்லையென பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். பொலநறுவை கல்லெல்ல கொவிட்-19 சிகிச்சை நிலையத்திலிருந்தே இவர்கள் கடந்த வாரம் தப்பிச் சென்றனர். சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் கிடைத்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தப்பிச் சென்ற நால்வரும் நீர்கொழும்பு ரிமாண்ட் சிறைச்சாலையிலுள்ள கைதிகள் எனத் தெரியவந்துள்ளது.இக் கைதிகளுக்கு வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து அவர்கள் மேற்படி சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top