தமிழ் நாட்டின் அழுத்தத்திற்கு மத்தியிலேயே யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுதூபியை நிர்மாணிப்பதற்கான அனுமதியை வழங்கியதாக பல்கலைக்கழக துணை வேந்தர் ஸ்ரீ சற்குணராஜா தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகத்தில் பொலிஸாருடன் கலந்துரையாடல்களை நடத்திய போதே அவர் இந்த விடயத்தை பொலிஸாருக்கு கூறும் விதமான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுதூபியை மீள நிர்மாணிக்கும் வகையில் இன்று அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கு சென்ற வேளையில் பொலிஸாருக்கும், பல்கலைக்ககழக துணை வேந்தருக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இதன்போது, அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். (Trueceylon)
