உள்நாட்டு செய்திகள்

திருகோணமலை சம்பூரில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

திருகோணமலை – சம்பூர் பகுதியில் உள்ள வயல் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று (27) மாலை இவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பூர் பகுதியை சேர்ந்த 65 வயதான ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின் பின்னரே மரணத்திற்கான காரணத்தை அறிவிக்க முடியும் என பொலிஸார் கூறியுள்ளனர். எவ்வாறாயினும், சம்பூர் பகுதியில் நேற்று இடிமின்னல் காணப்பட்டதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்தார். இவர் மின்னல் தாக்கில உயிரிழந்திருக்கக்கூடும் என பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர். சம்பவம் தொடர்பில் சம்பூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top