உள்நாட்டு செய்திகள்

திரையரங்குகளை நாளை முதல் மீளத் திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானம்!

நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளையும் நாளை முதல் மீளத் திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் சுமார் 105 நாட்களின் பின்னர் திறக்கப்படவுள்ளன. இந்த நிலையில் சுகாதார அறிவுறுத்தல்களின் பிரகாரம் திரையரங்குகளை நடாத்திச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, கலாச்சார அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார். இதே வேளை அரச விருது வழங்கும் விழா மற்றும் கண்காட்சிகளை இந்த வருடத்தில் வழமைபோன்று நடத்துமாறு கலாசார அமைச்சு, உரிய பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ள நிலையில் இதற்கான திட்டங்கள் கலாசார அமைச்சுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபபட்டுள்ளது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top