ஆன்மீகம்

தீபாவளியன்று கோயில்களில் 5 பேருக்கு மேல் கூட வேண்டாம்

தீபாவளி தினமன்று கோயில்களில் 5 பேருக்கு மேல் கூட வேண்டாம் என இந்து மத கலாச்சார விவகார திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. எதிர்வரும் 14ம் திகதி தீபாவளி பண்டிகை இந்துக்களினால் கொண்டாடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் நிலவி வரும் கொவிட்-19 நோய்த் தொற்று நிலைமையின் காரணமாக மக்கள் கூடுவதனை வரையறுத்துக் கொள்ளுமாறு அரசாங்கம் கோரியுள்ளது. தீபாவளி தினமன்று மக்கள் ஒன்றுகூடும் எந்தவொரு நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகளவில் கூடும் போது சமூக இடைவெளியை பேணுவதில் பெரும் சிரமங்கள் ஏற்படுவதாகவும் இதனால் மக்கள் கூட்டமாக ஒன்று கூடும் செயற்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கோயில்களில் ஐந்து அல்லது அதற்கும் குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களே ஒரு நேரத்தில் வழிபாடுகளில் ஈடுபட முடியும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top