ஆன்மீகம்

தீராத பண கஷ்டம் ஏற்படும் போது குபேரனை வழிபடுவது சரியா? இதிகாஷம் கூறும் உண்மைகள்..

வாழ்வில் சந்தோஷம் நிலையாக இருக்க வேண்டும் என்றால், பணமாக இருந்தாலும், அதிர்ஷ்டமாக இருந்தாலும் அளவோடு தான் இருக்க வேண்டும். அளவுக்கு மீறி அதிர்ஷ்டம் அடித்தாலும் பிரச்சினைதான். அளவுக்கு மீறி பணத்தை சம்பாதித்து வைத்துக் கொண்டாலும் பிரச்சினை தான்.

சுகமோ துக்கமோ எல்லையை மீறி செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவரவர் கையில்தான் உள்ளது. சரி, இப்போது உங்களுக்கு அவசரத் தேவைக்கு பணம் தேவைப்படுகிறது. ஆனால், உங்கள் கையில் ஒரு ரூபாய் கூட இல்லை என்ன செய்யலாம்? இறைவழிபாட்டின் மூலம் அதிர்ஷ்ட காற்று வீச, அந்த காலத்திலேயே நம் முன்னோர்கள் ஒரு வழிபாட்டினை சொல்லி வைத்துள்ளார்கள்.

நாம் பணம் காசு வேண்டுமென்றால் மகாலட்சுமியையும், குபேர பகவானையும் தானே வேண்டி வழிபாடு செய்வோம். ஆனால் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத நபரிடம் இருந்து, எதிர்பாராத தொகை உங்கள் கைக்கு வந்து சேர வேண்டுமென்றால் நீங்கள் இந்திர பகவானை வழிபாடு செய்ய வேண்டும்.

ஒருவருக்கு எதிர்பாராத யோகத்தை தரக்கூடிய சக்தி இந்திர பகவானுக்கு உண்டு என்று சொல்லப்பட்டுள்ளது. தீராத பண கஷ்டம் வரும்போது இந்த பிரயோகத்தை செய்து பாருங்கள். எப்போதுமே இந்தப் பரிகாரம் பலிக்கும் என்றும் சொல்லிவிட முடியாது. ‘அதிஷ்டம்’ என்ற ஒன்று உங்களுக்கு கிடைத்தாலும் கிடைக்கலாம்.

கிடைக்காவிட்டாலும் அதை நினைத்து வருந்தக் கூடாது. தீராத பண கஷ்டத்தில் சிக்கிக்கொண்டு இருக்கும்போது, அடுத்த சில தினங்களுக்குள் குறிப்பிட்ட தொகை பணம் உங்களுக்கு கைக்கு வந்தே ஆக வேண்டும் என்ற சூழ்நிலை இருக்கும் போது, உங்கள் வீட்டு பூஜையறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள்.

அந்த தீப ஒளியை இந்திர பகவானாக நினைத்து இரண்டு கைகளையும் ஏந்தி, ‘ஓம் இந்திர தேவாய நமஹ’ என்ற மந்திரத்தை 3 முறை உச்சரித்து, ஏதாவது ஒரு வழியில் உங்களுடைய கஷ்டம் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

அந்த தீபத்தின் அருகில் கொஞ்சம் கற்கண்டை நைவேத்தியமாக வைத்து, அந்த இனிப்பு கற்கண்டை வாயில் போட்டுக்கொண்டு, எப்பவும் போல அந்த நாளை தொடங்குங்கள். இப்படி செய்யும் பட்சத்தில் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசி, எதிர்பாராத பிரச்சனைகள் கூட ஒரு நொடிப் பொழுதில் காணாமல் போய்விடும்.

தொடர்ந்து இந்திர தேவனை 48 நாட்கள் வழிபாடு செய்து வந்தாலும், அந்த நபர் அதிர்ஷ்டமான நபராக மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

பெண்களும் இந்த வழிபாட்டை செய்யலாம். ஆண்களும் இந்த வழிபாட்டை செய்யலாம். பெண்களால் தொடர்ந்து 48 நாட்கள் செய்ய முடியாத சூழ்நிலை இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த 5 நாட்களை தவிர்த்து விட்டு, அடுத்து வரும் நாட்களை கணக்கில் சேர்த்துக் கொள்ளுங்கள். நம்பிக்கையுள்ளவர்கள் நம்பிக்கையோடு முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கு ‘அதிஷ்டம்’ அடிச்சா அது லாபம் தானே!

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top