உள்நாட்டு செய்திகள்

தென்னை மரங்களை தறிக்க அரச அனுமதி பெறவேண்டும்

தென்னை மரங்களை தறிப்பது மற்றும் தெங்கு பயிர்ச்செய்கை காணிகளை துண்டாடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. இனி தென்னை மரம் தறிப்பதற்கு அரசாங்கத்தின் அனுமதியைப் பெறவேண்டுமென இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்தார். சிலாபம் பகுதியில் மாதிரி தென்னை பயிர் செய்கை செயற்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். நாட்டு மக்களின் உபயோகத்துக்கு போதுமான அளவு தென்னை உற்பத்தி இடம்பெறுகின்ற நிலையிலும் தேங்காய்களை தொழிற்சாலைகளுக்கு வழங்குவதால் தேங்காய் விலை அதிகரித்து செல்வதாகவும் தெரிவித்தார். தேங்காய் விலைகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தாலும் அதனை ஓரளவே மட்டுப்படுத்த முடிகின்றதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக வெளிநாடுகளிலிருந்து சிறு அளவில் தேங்காயை கொள்வனவு செய்வது மற்றும் குளிரூட்டப்பட்ட தேங்காய் துருவலை பெற்றுக்கொள்வது என தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான அனுமதியும் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தேங்காய் எண்ணெய் உற்பத்தி மற்றும் தொழிற்சாலைகளுக்கு தேவையான தேங்காய்களை பெற்றுக்கொள்ளும் வகையில் இரண்டு தொழிற்சாலைகளுக்கு மாத்திரமே இறக்குமதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாம் தேங்காய் இறக்குமதிக்கான அனுமதியை விருப்பத்துடன் வழங்கவில்லை. எனினும் எல்லையில்லாமல் அதிகரித்துச் செல்லும் தேங்காய் விலையை கட்டுப்படுத்த இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top