அரசியல்

தேசியக் கொடியில் சிறுபான்மையினர் இல்லை என்பது அரசாங்கத்தின் நிலை எவ்வாறானது என்பதனை வெளிப்படுத்துகிறது – பா.உ கோ.கருணாகரன்

(துசி) தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ரெலோ இயக்கம் சார்பாக போட்டியிட்டு நாடாளுமன்றுக்கு தெரிவான கோவித்தன் கருணாகரன் அவர்கள் தனது வெற்றிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்தும் மக்கள் சந்திப்பு மகிழூர், குருமன்வெளி, எருவில் கிராமங்களில் நடைபெற்றது.

இதன் போது எருவில் கிராமத்தில் தனது வெற்றிக்காக உழைத்த ஆதரவாளர்களுக்கு நன்றி கூறி உரையாற்றும் போது தற்போதைய இலங்கை அரசாங்கம் அவர்களுக்கான
அமைச்சரவை நியமனத்தின் போது காட்சிப்படுத்திய தேசியக் கொடியானது கண்டி இராட்சிய காலத்தில் பயன்படுத்திய தேசியக் கொடியை
பயன்படுத்தியதனைக் காணமுடிந்தது. இங்கு சிறுபான்மையினரை மையப்படுத்தும் வகையிலான நிறங்கள் இல்லாமை சிறுபான்மையினர் மீது அவர்கள் கொண்டிருக்கும் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்துகின்றது எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பானது பாரிய விழ்ச்சியை சந்தித்திருக்கின்றது இதனை கட்டியெழுப்ப நாம் பாடுபடவேண்டும் எனவும் கருத்துரைத்ததார். மேலும் இது
எனது வெற்றியல்ல உங்களது வெற்றி உங்களில் ஒருவனாக நான் இருந்து மக்கள் பிணி துடைப்பேன் எனவும் எதிர்வரும் 20ந் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமானம் எடுத்த பின்பு உங்களை சந்தித்து நமது கிராமத்தின் அபிவிருத்திக்கான குறைகளை அடையாளப்படுத்தி எனது
பணிகளை மேற்கொள்ளவுள்ளேன் எனவும் குறிப்பிட்டார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top