உள்நாட்டு செய்திகள்

தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளில் தொடர்ந்தும் நானே…

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளில் தொடர்ந்தும் நானே இருப்பேன் என அக்கட்சியின் உறுப்பினர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். 

இன்றைய தினம் (22) யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வி.மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,…… 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய பதவிகளில் அங்கம் வகித்த என் மீது பொதுத் தேர்தல் முடிவடைந்த கையுடன் எவ்வித விசாரணைகளும் இன்றி சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். அத்துடன் கட்சியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளில் இருந்து நீக்கினார்கள். 

எனினும் என் மீது சுமத்தப்பட்ட குர்றச்சாட்டுக்களுக்கு போதிய விளக்கங்களை கட்சியின் தலைவரிடம் வழங்கியுள்ளேன். 

எனவே கட்சியின் இந்த இரு முக்கிய பதவிகளிலும் நானே தொடர்ந்தும் இருப்பேன். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடனான எனது பயணம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top