உள்நாட்டு செய்திகள்

தேசிய கீதம் மொழி பெயர்க்கப்படுவதை அனுமதிக்க கூடாது – புதிய யோசனை முன்வைப்பு

தேசிய கீதம் மொழி பெயர்க்கப்படுவதனை தடைசெய்ய வேண்டுமென தாய்நாட்டை பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் எல்லே குணவன்ச தேரரால் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த யோசனை புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் நிபுணர் குழுவிடம் நேற்றைய தினம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த யோசனையில், தேசிய கீதம் இனி வரும் காலங்களில் மொழி பெயர்க்கப்பட்டு இசைக்கப்படுவதனை அனுமதிக்கக் கூடாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டின் இறைமைக்கும் பௌதீக ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் ஏற்படுத்தும் வகையில் செயற்படுபோரின் சிவில் உரிமைகளை ரத்து செய்யும் வகையிலான சரத்தொன்றை புதிய அரசியல் அமைப்பில் உள்ளடக்க வேண்டுமென அவர் தனது பரிந்துரைகளில் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இலங்கையில் தேசிய கீதமானது சிங்கள, தமிழ் மொழிகளில் பாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top