ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் Alexei Navalny வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Alexei Navalny அருந்திய தேநீரில் விஷம் கலந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஊழல் தடுப்பு பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் Alexei Navalny, ரஷ்ய ஜனாதிபதி vitamin putin ஐ கடுமையாக விமர்சித்து வந்துள்ளார். இதே வேளை, ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் Alexei Navalny மீது முன்னதாக பல முறை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
