உள்நாட்டு செய்திகள்

நடிகை சித்ராவிற்கு அரசியல் வாதிகளுடன் தொடர்பு இருக்கிறது..

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்கி வந்த வி.ஜெ. சித்ரா, நட்சத்திர ஹோட்டலில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்தது.

இவரின் மரணம் தற்கொலை தான் என்று பிரத பரிசோதனை ரிப்போர்ட், தற்கொலை தான் என்று குறிப்பிட்டுருந்தது. ஆனால் சித்ராவின் பெற்றோர்கள் அளித்த புகாரின் படி, ஹேமந்தை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன் சென்னை காவல் துறை அலுவலகத்தில் அதில் சமூக வலைதளங்களின் மூலமாக தனக்கு பல தகவல்கள் கிடைத்துள்ளதாக, பல பரபரப்பு குற்றச்சாட்டுகளுடன் புகார் கொடுத்துள்ளார்.

புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளது :சித்ரா ஏற்கனவே மூன்று ஆண்களை காதலித்து உள்ளார். இதில் நிச்சயதார்த்தம் வரை சென்று சித்ராவின் திருமணம் நின்றதும் தெரியவந்துள்ளது. சித்ரா மது பழக்கத்திற்கு உள்ளானவர்.

விஜய் டிவியின் தொகுப்பாளர் ரக்‌ஷன் என்பவர் நெருக்கமான புகைப்படங்கள் எடுத்து வைத்து சித்ராவை மிரட்டியிருப்பதும் சமூகவலைதள செய்திகள் மூலம் எனக்கு தெரிய வருகிறது.

ஒரு சில எண்களில் இருந்து அழைப்பு வந்தால் சித்ரா பதட்டத்துடன் தனியாக சென்று பேசுவார் என்றும் பின்பு அந்த எண்களை அழித்து விடுவார் எனவும் ஹேம்நாத் என்னிடம் கூறியிருக்கிறார்.

முக்கியமான புலிகள் என கருதப்படும், அரசியல்வாதிகளுடன் தினமும் மணிக்கணக்கில் சித்ரா பேசியிருக்கிறார். சித்ரா திருமணம் செய்தால் பல ஆதாரங்களை வெளியிட்டு திருமணத்தை நிறுத்தவும் தயராக உள்ளதாக பல செய்திகள் வந்ததாக ஹேமந்த்தின் தந்தை ரவிச்சந்திரன் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும், சித்ரா TRP ரேட்டிங்கில் முதலிடத்தில் உள்ளார் என்பதால் அவருக்கு முதலீடு செய்த மற்றும் பழக்கம் உள்ள பெரிய நபர்கள் சினிமா நபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் அவருடன் தொடர்பில் இருந்துள்ளனர்.

சித்ராவுக்கு திருமணம் நடந்தால் அந்த பிரபலம் குறைய தொடங்கிவிடும் என்பதால் ஒரு சில நபர்கள் மிரட்டல் விடுத்திருக்கலாம் என எனக்கு சந்தேகம் இருக்கிறது.

சித்ரா தற்கொலை செய்து கொண்ட ஹோட்டலில் சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. ஒரு பக்கமாக விசாரணை நடந்து வருகிறது. பெண் வீட்டு தரப்பிலும் விசாரணை நடத்த வேண்டும்.

இந்த வழக்கில் வெளிப்படையான விசாரணை செய்து உணமையை வெளிக்கொண்டு வந்து சரியான குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் என் மகனை வழக்கில் இருந்து விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் ” என ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

இவர் அளித்துள்ள புகார், தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top