உலகம்

நள்ளிரவு ஒரு மணிக்கு வீட்டிலிருந்து கிளம்புவார்! பிரித்தானியாவில் கோடீஸ்வர பெண் செய்யும் ஆச்சரிய செயல்

பிரித்தானியாவில் லொட்டரியில் விழுந்த பரிசு மூலம் பெரும் கோடீஸ்வரர் ஆன பின்னரும் பெண்ணொருவர் செய்து வரும் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. Elaine Thompson என்ற பெண் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக The Marks & Spencer என்ற நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரின் பணி நேரம் அதிகாலை 2 மணியில் இருந்து காலை 9 மணி வரை இருக்கும். இதற்காக நள்ளிரவு 1 மணிக்கு அவர் வீட்டிலிருந்து வேலைக்கு கிளம்ப வேண்டியிருக்கும். தற்போது 65 வயதாகும் Elaine இந்த வேலைக்கு செல்ல வேண்டும் என கட்டாயமே இல்லை. ஏனெனில் Elaine மற்றும் அவர் கணவர் Derekக்கு கடந்த 1995ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லொட்டரியில் £2.7 மில்லியன் பரிசு விழுந்தது.

பெரும் கோடீஸ்வரர் ஆன பின்னரும் இந்த பணியை Elaine தற்போது வரை செய்து வருவது பலரையும் ஆச்சரியப்படுத்துகிறார். Elaine கூறுகையில், என் பணியை நான் மிகவும் நேசிக்கிறேன், லொட்டரியில் பரிசு விழுந்தால் வேலைக்கு போக கூடாது என அர்த்தம் கிடையாது. நள்ளிரவு 1 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்புவேன். காலையில் 9 மணி வரை எனக்கு பணி இருக்கும், ஆனால் நான் ஆஸ்துமா நோயாளி என்பதால் 8.30க்கு வீடு திரும்ப சிறப்பு அனுமதி உண்டு. எனக்கு 65 வயது ஆனாலும் ஓய்வு பெற முடிவு செய்யவில்லை. எவ்வளவு பணம் இருந்தாலும் கடினமாக உழைக்க வேண்டும், அப்போது தான் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாக இருக்க முடியும் என கூறியுள்ளார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top