உள்நாட்டு செய்திகள்

நள்ளிரவு வேளையில் கைது செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்

யாழ். பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அழிக்கப்பட்ட நிலையில் பல்கலை மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நள்ளிரவு வேளையில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் அத்துமீறி உள்நுழைய முனைந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என யாழ். மாநகர மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவரும் யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார். அவர்களை விடுவிப்பதற்கான முனைப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். இதேவேளை யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு இருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் அழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top