உள்நாட்டு செய்திகள்

நாடாளாவிய ரீதியில் கொரோனா அபாய வலயப்பகுதிகள் வெளியீடு

இலங்கையில் கொரோனா பரவல் தொடர்பிலான இடங்களை அடையாளப்படுத்தி சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. வடக்கில் யாழ்ப்பாணம், உடுவில், கோப்பாய்பருத்தித்துறை, சண்டிலிப்பாய் மற்றும் கிளிநொச்சி நகரப்பகுதி முல்லைத்தீவு வவுனியா உட்பட நாட்டில் கொரோனா தொற்றால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை சுகாதார அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது. கிழக்கில் வாழச்சேனைமத்தி, மட்டக்களப்பு, காத்தான்குடி, களுவாஞ்சிகுடி, கல்முனை, காரைதீவு, அட்டாளைச்சேனை, நித்தவூர், அக்கரைப்பற்று, ஆலயடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில், உகன, சம்மாத்துறை ஆகிய இடங்களை பரவல் அதிகம் உள்ள இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டள்ளன. பிரதேசத்துக்குப் பொறுப்பான சுகாதார மருத்துவ அதிகாரிகளின் வகைப்படுத்தலில் பதிவான நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. எடுக்கப்பட்ட நோயாளிகளின் விபரங்கள் டிசம்பர் 19 ஆம் திகதியுடன் முடிவடைந்த கடைசி 14 நாட்களுக்குள் பதிவாகியுள்ளன.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top