உள்நாட்டு செய்திகள்

நாட்டின் அனைத்து வீதிகளையும் அடுத்த நான்கு வருட காலப்பகுதியில் புனர்நிர்மாணம்

நாட்டின் அனைத்து வீதிகளையும் அடுத்த நான்கு வருட காலப்பகுதியில் புனர்நிர்மாணம் செய்தவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்களின் பொறுப்புக்கள் மற்றும் கடமைகள் குறித்து விளக்கமளிக்கும் கலந்துரையாடல் ஒன்று நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பல மாவட்ட மக்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி, தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு பங்களிக்குமாறு ஜனாதிபதி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்களிடம் கோரியுள்ளார்.

அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களுடன் இணைந்து அரச பொறிமுறையை வினைத்திறனாக பயன்படுத்தி நாட்டை முன்கொண்டு செல்வதற்கு மாவட்டக் குழுத் தலைவர்களுக்கு பாரிய பொறுப்பு உள்ளது.

மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவிக்கு அமைச்சர்கள் அல்லாத இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருப்பது அவர்களது முழு நேரத்தையும் அதற்காக செலவிடுவதற்காகும் என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

பல மாவட்டங்களுக்கு பொதுவான மற்றும் அந்த மாவட்டங்களுக்கு மட்டுமே குறிப்பான பிரச்சினைகளை அரசாங்கம் கண்டறிந்துள்ளது.

குடிநீர் மற்றும் நீர்ப்பாசனத் தேவைகள் நீர்ப்பாசன புனரமைப்பு, காட்டு யானைகள் கிராமங்களுக்கு வருதல், கல்வி மற்றும் சுகாதாரத்துறைகளில் உள்ள குறைபாடுகளை துரிதமாக நிறைவேற்றுவது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

அதனை நிறைவேற்றுவதற்காக அமைச்சர்களுக்கும் இராஜாங்க அமைச்சர்களுக்கும் நியமனங்களை வழங்கும்போது மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர்களையும் நியமித்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களினதும் நிலைமையினை மீளாய்வு செய்வதற்கும் பிரச்சினைகளுக்கு அவ்வப்போது தீர்வுகளை வழங்கும் நிகழ்ச்சித்திட்டமொன்றை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top