உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் 3.9 வீதத்தால் எதிர்மறை வளர்ச்சியை காட்டுவதாக மத்திய வங்கி ஆளுனர் தெரிவிப்பு

2020 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் பொருளாதார வளர்ச்சி விகிதம் முறை 3.9 வீதத்தில் குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் லக்‌ஷ்மனன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுப் பரவலின் தாக்கம் சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையின் பொருளாதாரத்தை வெகுவாக பாதித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், 2020 ஆண்டின் இரண்டாவது காலாண்டு பகுதியிலே நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமடைந்ததுடன், 3 ஆவது காலண்டில் ஓரளவு முன்னேற்றம் காணப்படுவதகவும் மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், 2021 ஆம் ஆண்டு முழுவதும் ஒற்றை இலக்க வட்டி விகிதத்தை நடைமுறைப்படுத்த மத்திய வங்கி எதிர்பார்த்துள்ளதாகவும் மத்திய வங்கி ஆளுநர் லக்‌ஷ்மனன் மேலும் தெரிவித்துள்ளார். சவாலான உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார பொருளாதார நிலைமைகளுக்கு மத்தியில் பொருளாதாரத்திற்கு போதுமான உத்வேகத்தை வழங்க நாணய மற்றும் நிதி தலையீடுகள் மூலம் தொடர்ச்சியான ஆதரவு அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top