யாழ். வடமராட்சிப் பகுதியில் நீண்டகாலமாக மணற் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பலொன்று இன்று விசேட அதிரடிப்படையினரிடம் வசமாகச் சிக்கிக் கொண்டுள்ளது. மணற் கடத்தல் தொடர்பில் விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து, குறித்த பகுதிக்குச் சென்ற நெல்லியடி பொலிஸார் மணற்கொள்ளையில் ஈடுபட்ட கன்ரர் ரக வாகனத்தைக் கலைத்துச் சென்றுள்ளனர். சுமார் ஜந்து கிலோ மீற்றருக்கும் மேற்பட்ட தூரத்துக்கு கலைத்துச் சென்ற போது, கொள்ளையர்கள் வாகனத்தைக் கைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
