உள்நாட்டு செய்திகள்

நேற்றைய(17.11.2020) கொவிட் நிலவரம்!!

நேற்றைய தினமும் 05 பேர் கொரோனா தொற்றினால் மரணமானதாக அறிவிக்கப்பட்டது. அவர்களின் மேலதிக விபரங்கள்..! (17-11-20200
01) கொழும்பு – 10 ஐ சேர்ந்த 65 வயது ஆண் வெலிகந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர். கொரோனா தொற்றுடன் உயர் இரத்த அழுத்தம் இருந்துள்ளது.
02) இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 69 வயது பெண் இவர் வீட்டில் இறந்துள்ளார்.
கொரோனா தொற்றுடன் உயர் இரத்த அழுத்தமும் உள்ளது.
03) கிருலப்பனை பகுதியை சேர்ந்த 71 வயது பெண் வீட்டில் இறந்துள்ளார். கொரோனா தொற்றுடன் உயர் இரத்த அழுத்தமும் உள்ளது.
04) கொழும்பு-02 பகுதியைச் சேர்ந்த 81 வயது பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்தார். கொரோனா நோயுடன் நிமோனியா இருந்துள்ளது.
05) தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த 82 வயது ஆண் வீட்டில் இறந்தார். கொரோனா தொற்றுடன் நீரிழிவு நோயும் இருந்துள்ளது. இதுவே மரணத்துக்கு காரணம் என கூறப்பட்டள்ளது.
இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது.

அத்தோடு நேற்று மட்டும் 401 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. அலை-2ன் தொற்று எண்ணிக்கை 14,568. மொத்த எண்ணிக்கை 18,075.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top