ஆரோக்கியம்

நோய் எதிர்ப்பு சக்தி – சுதேச மருத்துவ மூலிகைகள் குறித்து ஆராய தேசிய குழு

இலங்கைக்கே உரித்தான மருத்துவ மூலிகைகளை பேணிக் காக்கும் கூட்டு வேலைத்திட்டம் அமுலாக உள்ளதாக சுதேச மருத்துவத்திற்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார். இதற்குரிய பூர்வாங்கத் திட்டங்கள் அமுலாகவுள்ளன. கொவிட்-19 பெருந்தொற்றால் உருவான நெருக்கடியான சூழ்நிலைக்கு மத்தியில், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தக்கூடிய சுதேச மருத்துவ மூலிகைகள் பற்றி ஆராயப்படுகிறது. இதற்காக தேசியமட்டக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவின் விஞ்ஞானபூர்வமான ஆய்வுகளின் பின்னர் அரசிற்கு சமர்ப்பிக்கப்படும் விதந்துரைகளுக்கு அமைய, கொவிட் சிகிக்சைக்காக உள்நாட்டு மருந்து வகைகளை பயன்படுத்துவது பற்றி பரிசீலிக்கப் போவதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top