உள்நாட்டு செய்திகள்

நோர்வூட் தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் இருவருக்கு தொற்று

நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து வெஞ்சர் அப்பலோரன்ஸ் தோட்ட காரியாலயம், இரண்டு வர்த்தக நிலையங்கள் சுயதனிபடுத்தப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர் தரம் 09 இல் கல்வி பயிலும் ஒரு மாணவர், ஒரு மாணவிக்குமே கொரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் கிடைக்கப்பெற்ற பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. கடந்த வாரம் நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தின் ஆசிரியை ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து கடந்த 08 ஆம் திகதி குறித்த பாடசாலையில் பணிபரிந்து வந்த ஆசிரியர்கள்,மாணவர்களுக்கு அம்கமுவ,மஸ்கெலியா, மற்றும் பொகவந்தலா பொது சுகாதர காரியலயத்தினூடாக பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது

இதில் அம்பகமுவ, மஸ்கெலியா சுகாதர காரியாலங்களினூடாக மேற்கொண்ட 160 பேருக்கான பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையில் அவர்களுக்கு தொற்று இல்லை என தெரியவந்தது. மேலும் பொகவந்தலாவ பொது சுகாதார காரியலயத்தினூடாக மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை நேற்று முன்தினம் வெளியானதிலே இரு மாணவர்களுக்கு தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டது. தொற்றுக்கு உள்ளான இருவரும் நோர்வூட் வெஞ்சர் அப்பலோரன்ஸ் தோட்டப்பகுதியை சேர்ந்தவர்கள் இவர்களில் ஒரு மாணவியின் தந்தை தோட்ட காரியாலத்தில் தபால் சேவையில் ஈடுபட்டு வந்துள்ளமையினல் குறித்த காரியாலயம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. மேலும் தொற்றாளர்கள் இருவரோடும் தொடர்பை பேணி வந்த 12 குடும்பங்களை சேர்ந்த 60 பேர் 14 நாட்களுக்கு சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் இவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டு அதன் மாதிரிகள் நுவரெலியாவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top