உள்நாட்டு செய்திகள்

பண்டாரகம அளுத்கம பகுதியில் பதற்றம் – தாக்குதலில் பொலிஸ் அதிகாரிகள் நால்வர் காயம்

பண்டாரகம – அளுத்கம பகுதியில் பிரதேச வாசிகளின் தாக்குதலுக்கு இலக்காகிய இரண்டு பெண் பொலிஸார் உட்பட நான்கு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். அளுத்கம மாராவ பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை பொலிஸ் நிலையம் நோக்கி அழைத்து செல்லும்போது பொலிஸ் வாகனத்தை வழிமறித்த பிரதேசவாசிகள் பொலிஸார் மீது கற்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன்போது இரண்டு பெண் பொலிஸார் உட்பட நான்கு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்தனர். இதனால் உண்டான பதற்றமான நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு பொலிஸ் அதிகாரிகளும் பொலிஸ் விசேட அதிரடைப் படையினரும் குவிக்கப்பட்ட நிலையில் 4 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top