உலகம்

பரவும் பறவைக் காய்ச்சல் – 300இற்கும் மேற்பட்ட உயிரினங்கள் பலி!

ராஜஸ்தானில் ஜோத்புர் மற்றும் ஜால்வர் பகுதிகளில் திடீரென நூற்றுக்கணக்கான காக்கைகள் இறந்துள்ளன. இதனையடுத்து பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதாக வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். கடந்த ஒருவாரத்தில் 300 காக்கைகளும் 52 மயில்களும் இறந்தன. மயில்கள் இறந்ததற்கான காரணம் இன்னும் உறுதியாகவில்லை. ஜால்வர் வனத்துறையினர் காக்கைகள் இறந்தது குறித்து அரசுக்கு எச்சரிக்கை அறிக்கையை அளித்துள்ளனர். இந்த நிலையில் ராஜஸ்தான் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. மேலும் சந்தேகத்திற்கிடமான வகையில் விலங்குகளோ பறவைகளோ இறந்து கிடந்தால் தகவல் தெரிவிக்க அதிகாரிகள் தொலைபேசி உதவி எண்களை அறிவித்துள்ளனர்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top