உள்நாட்டு செய்திகள்

பலத்த காற்றினால் கிரான் பகுதியில் 60 வீடுகள் சேதம்

நாட்டின் சில பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. மட்டக்களப்பு – கிரான் பகுதியை ஊடறுத்து வீசிய பலத்த காற்றினால் சுமார் 60 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. வடிகான் கட்டமைப்பு உரிய முறையில் இன்மையால் மழை வௌ்ளம் வீடுகளுக்குள் புகுந்துள்ளதாக கிரான் பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர். இதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களை சென்று கிரான் பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாபு பார்வையிட்டார். அத்துடன், வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் குறிப்பிடுகின்றார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top