அரசியல்

பல வேடிக்கை மனிதரை போல நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ! தர்மத்துக்கும், அதர்மத்துக்குமிடையிலான போட்டியில் தர்மமே வெல்லும்
சட்டத்தரணி அனுசா

மத்தியகுழு, தேசியசபை என்பவற்றையெல்லாம் விடவும் மக்கள் சக்திக்கே வலிமை அதிகம். அந்த வகையில் மக்கள் என் பக்கமே நிற்கின்றார்கள். கடந்த பொதுத் தேர்தலின் போதும் இது உறுதியானது. என்று மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவரான அமரர் சந்திரசேகரனின் மகள் சட்டத்தரணி அனுசா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். கட்சியிலிருந்து அனுசா சந்திரசேகரனை நீக்கும் வகையில் மலையக மக்கள் முன்னணியின் தேசிய சபை இன்று எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, மலையக மக்கள் முன்னணியின் தேசிய சபை எடுத்துள்ளதாகக் கூறப்படும் தீர்மானம் தொடர்பில் எனக்கு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அவ்வாறு அறிவிக்கப்பட்டதும் எனது அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து தெளிவுபடுத்துவேன். யார், எப்படியான தீர்மானங்களை எடுத்தாலும் அரசியலில் அங்கீகாரம் வழங்கும் ‘சுப்ரீம் பவர்’ என்பது மக்களிடமே இருக்கின்றது. இதன்படி மலையக மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் எனது அரசியல் பயணத்தை அங்கீகரித்துள்ளனர். இதன் காரணமாகவே எனக்கு 17 ஆயிரம் வாக்குகள் வழங்கப்பட்டன. மலையக இளைஞர், யுவதிகளும் புதிய அரசியல் தலைமைத்துவத்தை வரவேற்றுள்ளனர். எனவே, மக்களின் பேராதரவுடன் முன்நோக்கி பயணிப்பேன். தர்மத்துக்கும், அதர்மத்துக்குமிடையிலான போட்டியில் தர்மமே வெல்லும் என்பதையும் கூறிக்கொள்கின்றேன்.” – என்றார் அனுசா சந்திரசேகரன்.

இதேய வேளை பெல்கேரியா மாடசாமி கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட அவர் தனது முகநூல் பக்கத்தில் பல வேடிக்கை மனிதரை போல நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ! என்று உருக்கமான பதிவினை இட்டுள்ளார்.
நமது வழிபாட்டு தலங்கள் நமது சமூகத்தின் அடையாளங்கள். இன்றும் அதே கலாச்சாரம் பேணப்படுவது நமது அடையாளங்களை கௌரவிப்பதாக அமையும்.மக்களின் அன்பிற்காகவும் இறைவனின் ஆசிர்வாதத்திற்காகவும் எனது தம்பிமார்கள் அழைத்ததிற்கிணங்க கலந்து கொண்டிருந்தேன். விழா சிறப்பாய் அமைந்திருந்த்து.

மக்களோடு மக்களாய் மக்களின் குரலாய் என் தந்தையின் சேவைகள் நிச்சயமாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மக்களுக்காய் குரல் கொடுக்கும் போதும் தொழிலாளர்களின் சந்தாபணத்தை பற்றி கேள்வி எழுப்பபடும் போதும் இவ்வாறான பதவி நீக்கங்கள் நடைபெறுவது இயல்பானது. இவற்றை கண்டு அஞ்சி ஓடுபவள் நானல்ல. என்னுடன் இருக்கும் ஆதரவாளர்கள் இதற்கெல்லாம் வீழ்பவர்களும் அல்ல. எனக் குறிப்பிட்டுள்ளார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top