அரசியல்

பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸுக்கு சாய்ந்தமருதில் மகத்தான வரவேற்பு..

நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் அதிகூடிய விருப்பு வாக்கு பெற்று வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸினை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வும்,நன்றி தெரிவிக்கும் நிகழ்வும் சாய்ந்தமருது பாஸ் குழுவினரின் ஏற்பாட்டில் இன்று(17) சாய்ந்தமருது மக்களினால் பிரமாண்டமான வரவேற்பும்,வெற்றி கூட்டமும் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலில் இருந்து வைத்தியசாலை வீதி வரை நடைபெற்றது

இப் பிரமாண்டமான நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம் ஹரீஸ் கலந்து கொண்டு நடந்து முடித்த தேர்தலில் கல்முனை தொகுதியில் பெருவாரியான வாக்குகளை முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும்,எனக்கும் வழங்கி வெற்றி பெற செய்த சாய்ந்தமருது மக்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்ளுவதோடு எதிர்கால அரசியல் செயற்பாடுகளிலும் அபிவிருத்தி முன்னெடுப்புகளிலும் என்றும் நன்றியுனர்வோடு இருப்பேன் எனவும் கருத்து தெரிவித்தார்.

மேலும் இந் நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம் ரக்கீப்,காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எம் பஸ்மீர்,எம்.எச்.எம்.இஸ்மாயில், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.நிசார்தீன்
முன்னாள் கல்முனை மாநகர சபை முதல்வர் கலாநிதி சிறாஸ் மீராசாஹிவு அவர்களின் செயலாளர்களான எம்.ஏ.எம்.இன்சாட்,ஏ.எம் இன்சாத்,சாய்ந்தமருது முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் எப்.எம்.தில்சாத் உட்பட கட்சியின் போராளிகள் பலர் கலந்து கொண்டனர்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top