உள்நாட்டு செய்திகள்

மட்டக்களப்பு திறந்த பல்கலைக்கழக அபிவிருத்தி தொடர்பாக பா.உ இரா.சாணக்கியன் கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மட்டக்களப்பு பிராந்திய திறந்த பல்கலைக்கழக கட்டமைப்பு தொடர்பாக கலந்துரையாடல்
மட்டக்களப்பு பிராந்திய இலங்கை திறந்த பல்கலைக்கழக கட்டமைப்பு அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் பிராந்திய இயக்குனர் எந்திரி தேவநம்பியதீசன் கமலநாதன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ,முன்னாள் கொழும்பு வளாக இலங்கை திறந்த பல்கலைகழக இயற்கை விஞ்ஞான பீட மாணவர் சங்கத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளருமாகிய பொன்னுத்துரை உதயரூபன், பல்கலைகழக பீட பாடவிதான இளைப்பாளர்கள், நூலகப் பொறுப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பல்கலைகழகத்தின் பௌதீக மற்றும் மனித வள பற்றாக்குறை தொடர்பாக கவனம் செலத்தப்பட்டதோடு, கல்வி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருவதற்குரிய நடவடிக்கைகள் மேற் கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினரால் உறுதிமொழி வழங்கப்பட்டது. மேலும், சட்டமானி பட்டம், இயற்கை விஞ்ஞான பட்டபடிப்புகள், ஆரம்ப கல்வி மற்றும் கல்வியல் தொடர்பான கற்கை நெறிகளுக்கு மாணவர் ஆட்சேர்ப்பு திட்டம் தொடர்பாகவும் பௌதீக பற்றாக்குறை தொடர்பாகவும் கூடிய கவனம் செலுத்தப்பட்டது. மட்டக்களப்பு பிராந்திய கற்கைநெறி விடயத்தில் கல்வி முதுமானி, மற்றும் ஏனைய துறைகளுக்குரிய பட்டபடிப்புக்கள் தொடர்பாக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருவதற்குரிய நடவடிக்கைகள் எடுப்பதாகவும், பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் உறுதி மொழி வழங்கப்பட்டது.
மேலும், பல்கலைகழகம் கல்வி இராஜாங்க அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டிருப்பதால் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி கூட்டத்திற்கு இலங்கை திறந்த பல்கலைக்கழக மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளரை அழைப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யுமாறு மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய திருமதி. கலாமதி அவர்களுக்கு தொலைபேசியின் மூலம் கவனம் செலுத்துமாறும் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் பிராந்திய கற்கை நிலையத்தின் விஞ்ஞான கல்வி விரிவுரை தொடர்பாகவும் மற்றும் துணை மருத்துவ விஞ்ஞானத்துறை விரிவுரைகள், தாதியியல்மானி கற்கை நெறி தொடர்பாகவும் பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
விரைவில் இலங்கை திறந்த பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் அரியதுரை மற்றும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு உறுப்பினர்கள், பீட தலைவர்கள், பிராந்திய இணைப்பாளர் ஆகியோரை கல்வி அமைச்சுக்கு அழைத்து மட்டக்களப்பு பிராந்திய கற்கை நிலையத்தின் பௌதிக மனிதவள அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் கவனஞ்செலுத்துவதாக தெரிவித்துள்ளார்

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top