உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் விடுத்துள்ள அறிக்கை – அனைவருக்கும் இதயபூர்வமான நன்றிகள்

அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். குறுகிய கால அவகாசத்தில் விடுக்கப்பட்ட பூரண ஹர்த்தாலுக்கு மாபெரும் ஆதரவு வழங்கியமைக்கு வட கிழக்கில் உள்ள அனைத்து மக்களுக்கும் மற்றும் வணிக நிறுவனங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.இன்றைய தினம் மாணவ சமூதாயத்தின் பலம் இன்னொருமுறை நிரூபிக்கப்படுள்ளது மற்றும் பலருக்கு பாடம் புகட்டியுள்ளது. எமது ஒற்றுமையே எமது பலம். “எமது உரிமை எமது உணர்வு”

பாராளுமன்றத்தில் ஏற்ப்பட்ட COVID – 19 தொற்றுப் பரம்பல் காரணமாக நான் சுய தனிமைப்படுதலுக்கு உட்பட்டுள்ளேன் இதன் காரணமாக அன்றைய தினம் யாழ் பல்கலைக்கழகத்திற்கு என்னால் வர முடியாததை எண்ணி மிகவும் மனம் வருந்துகின்றேன். அத்துடன் தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மயிலத்தமடு பண்ணையாளர்களை நேரில் சென்று பார்க்க முடியால் போய்விட்டதையும் எண்ணி வருந்துகின்றேன். உங்கள் பிரச்சனையை நான் ஒரு போதும் விடப்போவதில்லை நீதி கிடைக்கும் வரை தொடருவேன்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top