பொழுது போக்கு

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் எலிமினேட் யார் தெரியுமா?

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 4-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்படுவார். அந்தவகையில் இந்த சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா மற்றும் அர்ச்சனா ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டனர். கடந்த வாரம் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், இந்த வாரம் சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான ஆஜித் குறைவான வாக்குகள் பெற்றதால் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top