உலகம்

பிரபல நடிகைக்கு கொரோனா தொற்று

பிரபல நடிகைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, எனக்கு கோவிட் 19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். நான் நலமாக இருக்கிறேன். நன்றாக ஓய்வெடுப்பேன். அப்பொழுது தானே விரைவில் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியும். என்னை சந்தித்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி, அனைவரும் பத்திரமாக இருக்கவும் என்று தெரிவித்துள்ளார். ரகுலின் ட்வீட்டை பார்த்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் கூறியிருப்பதாவது, விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறோம். தைரியமாக இருங்கள். அது தான் இந்த நேரத்தில் ரொம்ப முக்கியம் என்று தெரிவித்துள்ளனர். முன்னதாக ஹைதராபாத்தில் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட தமன்னாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு சரத்குமாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு ஹைதராபாத்தில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குணமாகி வீடு திரும்பிய சரத்குமார் தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top