இரத்மலானையில் அமைந்துள்ள பிரபல பேக்கரியில் 23 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பேக்கரியில் பணிபுரியும் 50 பேர் மீது இன்று மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் 23 பேருக்கு தொற்று உள்ளமை தெரியவந்தது. இந்த பேக்கரியில் இருந்து நாடளாவிய ரீதியில் உணவுப்பொதிகள் விநியோகம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. தொற்றுக்குள்ளானவர்கள் மற்றும் குறித்த பேக்கரி என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
